முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த கோவில் யானையாக கும்பகோணம் மங்களம் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Kumbakonam 2024-02-04

Source: provided

கும்பகோணம் : கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதானது லோக்தந்த்ரா அவுர் ஜந்தா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோவிலாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோவிலுக்கு, கடந்த 1982-ம் ஆண்டு, காஞ்சி மகா பெரியவர், இந்த மங்களம் யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் யானை மங்களத்திற்கு இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் அதன் ஆரோக்கியத்திற்காகவும், வைட்டமின் சத்துக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது.

அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடன், அதனை பராமரிக்கும் யானைப் பாகன் அசோக்கிடம் சேர்ந்து, செல்போன் பார்ப்பது, குறும்புத்தனம் செய்வது போன்ற வீடியோ வலைத்தளங்களில் புகழ்பெற்றதாகும். இதனால் கும்பகோணத்திற்கு வருபவர்கள், யானை மங்களத்தைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சிறப்பு பெற்ற யானை மங்களத்திற்கு, சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் உள்ள யானைகளை ஆண்டுதோறும் முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்று வந்தன. ஆனால் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த முகாமிற்கு யானைகள் செல்லவில்லை. 

இதனையொட்டி, அந்த யானைகளின் பராமரிப்பு, சுற்றுப்புறச்சூழல், யானையை கவனிப்பது உள்ளிட்ட அதற்கு தேவையான அனைத்தையும் முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற  லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் உள்ள 34 யானைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில், தமிழகத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில்  யானைக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.  மேலும், மற்ற யானைகளை சிறப்பாக பராமரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து