Idhayam Matrimony

ஜார்கண்ட் பா.ஜ.க. எம்.பி.யும் அரசியலில் இருந்து விலகல்?

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      அரசியல்
BJP 2023 04 10

புதுடெல்லி, அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  பா.ஜ.க. எம்பியுமான கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. எம்பியான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இவர் கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். 

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. எம்.பி.யும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் மகனுமான ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்ற உள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரத்தில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைக்கிறேன். உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் எனது முயற்சிகளை நான் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, எனது நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டிற்கும், ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க. தலைமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து