முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்பட உள்ளன என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதத்துக்கான தரிசனம், ஆர்ஜித சேவா சங்க தொண்டர்களுக்கான டிக்கெட்டுகள், ஸ்ரீவாரி சேவா ஒதுக்கீடு விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். 

லக்கி டிப்பில் (குலுக்கல் முறை) ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான பதிவு 18-ம் தேதி காலை 10 மணியில் இருந்து 20-ம் தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை இறுதி செய்ய வேண்டும்.

வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். 

ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 21-ம் தேதி மதியம் 3 மணிக்கு ஸ்ரீவாரி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவா டிக்கெட்டுகள், தரிசன டிக்கெட்டுகள் ஆகிய உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். 25-ம் தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்படும். 

திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களுக்கான சேவை, திருப்பதி ஒதுக்கீடு 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும். 

மேலே உள்ள அனைத்து ஆன்லைன் ஒதுக்கீட்டையும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து