முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை மக்களுக்காக பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை : கோவை கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-12

Source: provided

கோவை : 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று கோவை பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் இன்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பரப்புரை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் காந்தி கூறியதாவது:-

மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார். அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை. இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் உள்ளன. என் வீடு பறிக்கப்பட்டாலும் தமிழர்கள் எனக்காக தங்களது வீடுகளை திறந்து வைத்திருப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.

ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது? தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து