முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் 55 ஆயிரத்தை எட்டியது

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 600 அதிகரித்து ரூ.54,840க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை கடந்த ஒரு வருட காலமாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இதற்கிடையே,  கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. 

நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், நேற்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 600 அதிகரித்து ரூ.54,840க்கும், ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.6,855-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ஏற்கெனவே தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது இஸ்ரேல் மீதான  ஈரான் தாக்குதலால் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து