முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்டு, வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, 

ஏப்ரல் 19-ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற நாள், நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல். சாதி, மதம் கடந்து மக்களை ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். 

நாட்டை காக்க, நாளைய தலைமுறையை காக்க இண்டியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க.வையும், தமிழகத்தை பாழ்படுத்திய அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். 

தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க, தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இண்டியா  கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து