முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      உலகம்
France-2024-04-23

பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையிலும் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். பிரான்ஸ் - இங்கிலாந்து இடையேயான கடல் பகுதியில் இங்கிலீஷ் சேனல் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய அகதிகள் நுழைந்துள்ளனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரு குழுந்தை உள்பட 5 அகதிகளும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வடக்கு பிரான்சின் விம்மரெக்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கின. இதையடுத்து, உடல்களை கைப்பற்றிய பிரான்ஸ் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து