முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      உலகம்
Maldives 2024-05-07

Source: provided

மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

மேலும்  இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. 

இது மாலத்தீவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கு முன்பு போல் சுற்றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது.

இந்த நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா  வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது. இது குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராகிம் பைசல் கூறும் போது, 

எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். 

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருக்குமாறு நான் கூற விரும்புகிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 10 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 10 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 10 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து