முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி - அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா      அரசியல்
Selvabaru 2023-02-19

சென்னை, தமிழர்கள் குறித்து அவதூறாக பேசி வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழகத்திற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார்.

தமிழகத்திற்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி மோடி பேசுவார். மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. 

இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பா.ஜ.க. தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு வாரத்திற்குள் தமிழக மக்களிடம் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது. அதனால் தான் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளவில்லை.  இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து