முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை: ரஷ்யா

புதன்கிழமை, 22 மே 2024      உலகம்
Ukraine 2024-05-22

மாஸ்கோ, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது.

சமீபத்தில் ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி இருந்தது. 

இந்நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து