முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு : என்.ஐ.ஏ. அறிவிப்பு

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
NIA 2024-04-06

Source: provided

கோவை : தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த பா.ம.க. பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அறிவித்துள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா ரூ. 5 லட்சம் என்ற வீதத்தில், 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தகவலை 044 2661 5100, 9499945100, 99623 61122 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவலை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து