முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் இத்தாலி பிரதமர் மெலோனி

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      உலகம்
Modi 2024-05-15

Source: provided

ரோம் : இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது. 

50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது பிரதமர்  மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் தற்போது  வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், மெலோடி டீமிடம் இருந்து ஹலோ என்று கூற பின்னால் பிரதமர் மோடி  சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றது. 

அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், மெலோடி என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து