எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ஜனாதிபதிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது முன்மாதிரியான சேவை மற்றும் நம் தேசத்திற்கான அர்ப்பணிப்பு நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும் வலியுறுத்தலும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும். அவரது வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சிக்கும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்கும் திரெளபதி முர்மு காட்டும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரது ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது, ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நமது ஜனாதிபதி நல்ல உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும், மனநிறைவளிக்கும் பெருவாழ்வினை வாழ விழைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


