முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணி வெற்றி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.  இறுதியில் அமெரிக்கா 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் 19வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய ஜோர்டன், 2வது பந்தில் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்து வீசிய 3 பந்துகளிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோர்டன் 2.5 ஓவரில் 10 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன் சேர்க்கத் துவங்கிய இந்த ஜோடியால், இங்கிலாந்து அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இறுதியில் ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களும் , பிலிப் சால்ட் 25 (21) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

___________________________________________________________________________________________

விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம்

கடந்த சனிக்கிழமை அன்று இந்திய அணி வங்கதேசத்தை 50 ரன்களில் வென்றது. அந்தப் போட்டியில் பீல்டிங்கில் சிறந்து விளங்கிய சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது. அதனை ரிச்சர்ட்ஸ் வழங்கி இருந்தார். இதற்காக அவர் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து வீரர்களை சந்தித்தார். அப்போது விபத்தில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணி வீரர்களை அவர் பாராட்டி இருந்தார். “இது மாதிரியான நீண்ட தொடர்களில் சிறந்த ஆட்டத்தை தொடக்கத்திலேயே வெளிப்படுத்துவது சில நேரங்களில் சிறப்பாக இருக்காது என நான் கருதுகிறேன். இது மாதிரியான தொடர்களில் ஆரம்ப கட்டத்தில் சில சறுக்கல் இருக்கலாம்.

சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான நாக்-அவுட் போட்டிகளில் நமது ஆட்டம் வெளிப்படுவது அவசியம். அந்த வகையில் பார்த்தால் விராட் கோலி ‘போராட்ட’ குணம் கொண்டவர். அதனால் அவர் நிச்சயம் நாக்-அவுட்டில் அபார ஆட்டமாடி அசத்துவார் என நம்புகிறேன். அதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 இன்னிங்ஸ் ஆடி 66 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________

உஸ்மான் கவஜா விருப்பம்

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டேவிட் வார்னர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் டேவிட் வார்னர் விடைபெற வேண்டும் என நினைப்பதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது.,  

டேவிட் வார்னரின் நண்பராக அவர் உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நன்றாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவை தோற்கடித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை கண்டிப்பாக வெல்ல முடியும் என நினைக்கிறேன். வாழ்வா? சாவா? போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் சிறப்பாக விளையாடும் என்றார். சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா இன்று இந்திய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________

ஆப்கான் ஜோடி சாதனை

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய நேரப்படி காலை நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் திரட்டினர். ஏற்கனவே நடப்பு தொடரில் உகாண்டா (154 ரன்) மற்றும் நியூசிலாந்துக்கு (103 ரன்) எதிராகவும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி, டி20 தொடர்களிலும் 3 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் உருவாக்கிய ஒரே ஜோடி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து