முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 24-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்: பங்கேற்க 4 மாநிலங்களுக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Cauvery 2023 06 07

புதுடெல்லி, காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் வருகிற 24-ந்தேதி கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. 

ஆனால் 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது எனக்கூறிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நீரை தமிழகத்திற்கு வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 100-வது கூட்டம் கூடுகிறது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 24-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து