எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் என குற்றச்சாட்டிய இன்டியா கூட்டணி கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே பிரச்சினையை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல்...
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் அவையில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். இந்த சூழலில், பாராளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவாகும்.
எதிர்க்கட்சிகள்....
இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில், சில பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், ஆந்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதியொதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்களை ஆளும் அரசுகள், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நேரடி ஆதரவை வழங்கியுள்ளன. இதனால், அந்த மாநிலங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறப்பட்டது.
ராகுல் தலைமையில்...
முன்னதாக அவை நடவடிக்கைகள் நேற்று தொடங்கு முன் பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் எச்சரிக்கை...
இந்த சூழலில், பாராளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியதும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எழுப்ப முயன்றனர். எனினும், கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்து பேசினார். பாராளுமன்ற பாரம்பரிய முறைகளை இருதரப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட முறையில் இடையூறு ஏற்படுத்துகிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நுழைய முடியாத...
பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து செல்லும் வழியில், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்ற இல்லத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது என்று பிர்லா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவையில் எடுத்து கூறினார். இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பலர் தன்னிடம் கடிதம் வழியே தெரிவித்தனர் என பிர்லா கூறினார். எனினும் அவையில், பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில்...
இதற்கிடையே மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன்வைத்தபோது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பு ...
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 50 min ago |
-
ஒருவாரகால அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றார்
30 Aug 2025சென்னை, “ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.
-
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு; அமெரிக்க பொருளாதார நிபுணர் கருத்து
30 Aug 2025மாஸ்கோ : இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.
-
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
30 Aug 2025சென்னை : நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. அணி
30 Aug 2025பெங்களூரு : பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல்.
-
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
30 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
30 Aug 2025சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 2026 தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
கம்போடியா தலைவருடனான உரையாடல்: தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம்
30 Aug 2025பாங்காக் : பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் கூறி, அரசியல் சாசன நீதிமன்றம் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
-
ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்
30 Aug 2025புதுடெல்லி : அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய தபால் துறை ரத்து செய்துள்ளது.
-
ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தனர்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
30 Aug 2025சென்னை : “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
பிராட்மேன் தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம்
30 Aug 2025கான்பெரா : பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம் போனது.
-
இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங்
30 Aug 2025புதுடெல்லி, ‘இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே முக்கியம்" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் பங்கேற்றார் அகிலேஷ் யாதவ்
30 Aug 2025பீகார் : பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
-
ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சு: இரு நாட்டு கூட்டு ஒத்துழைப்புக்கு அழைப்பு
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
30 Aug 2025சென்னை, அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
30 Aug 2025மதுரை : திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு?
30 Aug 2025சென்னை : புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
30 Aug 2025நியூயார்க் : கடந்த ஜனவரியில் கமலா ஹாரிஸ் பதவி விலகிய நிலையில், 6 மாத காலத்திற்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
-
அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயார்: வெளியுறவு அமைச்சர் இஷாக் தகவல்
30 Aug 2025இஸ்லமாபாத், காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று பாகிஸ்தான் வெளி
-
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு; சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா புறப்பட்டார்.
-
முத்தரப்பு டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்
30 Aug 2025சார்ஜா, ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
31 Aug 2025