முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராட்மேன் தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Bradman 2025-08-30

Source: provided

கான்பெரா : பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம் போனது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன். டெஸ்டில் இவரது ரன் சராசரி 99.94 ஆக இருந்தது. கடந்த 1946-47ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்தது. பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றது.

அப்போது அணிந்திருந்த பச்சை நிற தொப்பி, நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. இதை அரசின் உதவியுடன், கான்பெரா தேசிய அருங்காட்சியகம், ரூ. 2.53 கோடி கொடுத்து வாங்கியது. பிராட்மேனின் 11 தொப்பியில், 9 தனியாரிடம் உள்ளன. 2 ஆஸ்திரேலிய அரசின் வசமானது. ஆஸ்திரேலிய கலைத்துறை அமைச்சர் டோனி பர்கே கூறுகையில்,'' பிராட்மேன் அணிந்திருந்த பச்சை நிற தொப்பியை, பார்வையாளர்கள் தேசிய அருங்காட்சியகத்தில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து