முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவைப்பட்டால் கேரளாவுக்கு இன்னும் உதவிகள் செய்வோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது, நான் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். தமிழ்நாடு அரசின் சார்பாக எந்த உதவிகளும் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

அதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழு அனுப்பியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி பணமும் அனுப்பியிருக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.

ஆளுநரின் பதவிக் காலம் முடியப்போகிறது. அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் குடியரசுத் தலைவரும் இல்லை, பிரதமரும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து