முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு பேரிடர்: 3 நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். இலவச சேவை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
BSNL 2023-05-25

Source: provided

வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 நாட்களுக்கு இலவச சேவையை வழங்குகிறது

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், வயநாடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் தாலுக்காவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு வசதியை வழங்குவதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

அத்துடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்.களையும் பெறுவார்கள். மேலும் சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. 

சூரல்மாலாவில் உள்ள ஒரே மொபைல் டவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமானது. சூரல்மலை மற்றும் மேப்பாடி மொபைல் டவர்கள் போர்க்கால அடிப்படையில் 4ஜி-க்கு மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நாட்கள் இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து