முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. சார்பில் 14-ம் தேதி ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Vaiko 2024-05-02

Source: provided

சென்னை : மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் ம.தி.மு.க.வின் 30-வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார். 

பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு  பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். பா.ஜ.க. அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழகம்  புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதை கண்டித்தும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 14-ம்  தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது  என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து