முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார்: மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      சினிமா
Baburaj 2024-09-03

திருவனந்தபுரம், ஜூனியர் நடிகை அளித்த புகாரை தொடர்ந்து மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள திரையுலகில் பாலியல் புகார்கள் தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கை நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள சில பகுதியை  முக்கிய புள்ளிகளை காப்பாற்ற  அரசு நீக்கியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அறிக்கையில் உள்ள குற்றசாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய கேரள அரசு தற்போது முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வரும் 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பே முழு அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரம்.இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் ஜூனியர் நடிகை அளித்த புகாரின்படி மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு தனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக அடிமலையில் உள்ள ரெசார்ட் மற்றும் அவரது வீட்டில் வைத்து பாபு ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார்.  அதன்படி அந்திமாலை போலீசார் பாபு ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து