முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி : விரைவில் மாநாடு நடக்கும் தேதியை அறிவிக்கிறார் விஜய்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
Vijay 2024-09-08

Source: provided

சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாடுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் மாநாடு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

வருகிற 23-ந்தேதி? 

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

21 கேள்விகள்... 

இந்த நிலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

33 நிபந்தனைகள்...

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம்...

முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.  இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்., என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். 

அனுமதி வழங்கி... 

இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. 

விரைவில் அறிவிப்பு...

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழகத்தில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்! என்று அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய நிபந்தனைகள்

1) மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள்?

2) பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

3) போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

4) மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 

5) மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்?

6) எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

7) குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

8) கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

9)  நடிகர் விஜய் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து