முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      உலகம்
Sri-Lanka 2024-03-17

Source: provided

கொழும்பு : பொருளாதார நெருக்கடி, தொடர் போராட்டங்களால் முடங்கி இருந்த இலங்கை சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கை பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடந்த ஆட்சி மாற்றம் அதன் பிறகான மாணவர்கள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் அந்நாட்டு சுற்றுலாத்துறை முடங்கியது.

மேலும், பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சென்றது. சில மாதங்களாக அங்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில், சுற்றுலாத் துறையும் படிப்படியாக மீண்டு வருகிறது. இது   ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நட்டல் கூறுகையில், 

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா மற்றும் போராட்டங்கள் பிறகு கடந்த ஆண்டு சுமார் 14 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்ததாக அந்த நாட்டு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டின் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து