முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 6 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைக்க ஜடேஜாவுக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

சென்னை : ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள நிலையில் இன்னும் 6 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பார்.

சென்னையில்....

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.

மாபெரும் சாதனை... 

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 294 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

300  விக்கெட்டுகள்...

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினால் இந்திய அணிக்காக 300 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இடது கை சுழல் பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. ஜடேஜா அந்த சாதனையை சென்னை டெஸ்ட் போட்டியிலேயே படைப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

அதிக விக்கெட்கள் (இந்தியா):

1) அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்.

2) ரவிச்சந்திரன் அஸ்வின் - 516 விக்கெட்டுகள்.

3) கபில் தேவ் - 434 விக்கெட்டுகள்.

4) ஹர்பஜன் சிங் - 417 விக்கெட்டுகள்.

5) ஜாகீர் கான் - 311 விக்கெட்டுகள்.

6) இஷாந்த் சர்மா - 311 விக்கெட்டுகள்.

7) ரவீந்திர ஜடேஜா - 294 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து