முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி வழக்கு: லல்லு, தேஜஸ்வி ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Lallu 2023-10-04

புது டெல்லி, நில  மோசடி தொடர்பான வழக்கில் லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருகின்ற 7-ம் தேதி   நேரில் ஆஜராகுமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

பீகார் முன்னாள் முதல்வர், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே துறை  அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் குரூப் டி பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லல்லு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. 

இந்த விவகாரத்தில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில்  நடைபெற்று வருகிறது. லல்லு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி  கோர்ட்டில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கோர்ட்டு ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி, லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருகின்ற 7-ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து