Idhayam Matrimony

தங்களது லட்சியத்தை அடைய போராடும் இந்திய பெண்கள் அமெரிக்க தூதர் பாராட்டு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      உலகம்
America 2024-10-12

Source: provided

வாஷிங்டன் : இந்தியாவில் உள்ள பெண்கள் லட்சியத்தை அடைய போராடுவார்கள் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். 

துர்கா பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து,  வலைதளத்தில் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, 

பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் விடா முயற்சியை கொண்டாடுவதற்கான அற்புதமான நேரம். இந்தியாவில் நான் சந்திக்கும் பெண்கள் கனவு காண்கிறார்கள். அவற்றை அடைய போராடுவார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்கள் தங்களது உறவுகளை வழிநடத்தி மாற்றங்களை உருவாக்குபவர்கள்.

பெண்கள் வெற்றி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நாம் எடுக்க வேண்டும். பெண்கள் பள்ளிகளுக்கு நுழைவதை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வி பெற அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுதான் தொழில் செய்வதில் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும். 

மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பன்முகத் தன்மையை கொண்டாடுகிறோம். மத சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து