முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு : தமிழக காவல்துறை எச்சரிக்கை

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

சென்னை : காலை, இரவு தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பதியப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.

தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து