முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு மேகதாது திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
sitharamaya 202411-29

Source: provided

 

புது டெல்லி: டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே.சிவகுமார், எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது விவசாயம், நீர்வளம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் சித்தராமையா முன்வைத்தார்.

குறிப்பாக கர்நாடக மாநிலத்திற்கு 2023-24ல் ரூ.5,600 கோடியாக இருந்த குறுகிய கால விவசாயக் கடன் வரம்பை நபார்டு வங்கி 2024-25ல் ரூ.2,340 கோடியாக குறைத்துள்ளதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதற்கு நிதித்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஜல் சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இரண்டு முக்கியமான நீர் திட்டங்களான மேகதாது மற்றும் கலசபந்தூரி திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், வளர்ந்து வரும் 13 மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,000 கோடியும், மத்திய கர்நாடகாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து