முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      உலகம்
Canada 2024-12-07

Source: provided

ஒட்டவா: கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளர். இது தொடர்பாக அவருடன் அறையில் தங்கியிருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங் (22) என்பவர், கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில்  வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கனடாவில் உள்ள சர்னியா பகுதியில், கிராஸ்லி ஹண்டர் (36) என்பவரோடு அறை எடுத்து தங்கியிருந்தார்.

இவர்கள் இருவரும் சமையலறையில் இருந்த போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராஸ்லி ஹண்டர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங்கை சரமாரியாக பலமுறை குத்தினார். 

இதில் படுகாயமடைந்த குராசிஸ் சிங், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனையடுத்து,  தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குராசிஸ் சிங்கின் உடலை மீட்டனர். 

மேலும், தனது அறை தோழரை கத்தியால் குத்திக் கொலை செய்த கிராஸ்லி ஹண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து