முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாட் நாட்டு அதிபர் மாளிகை மீது நடந்த தாக்குதலில் 19 பேர் பலி

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      உலகம்
Suicide 2023 04 29

நிஜாமீனா, ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசின் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.

சாட் குடியரசு நாட்டின் தலைநகர் நிஜாமீனாவிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம்  இரவு 7.45 மணியளவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு உடனடியாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில், அதிபரின் பாதுகாவலர் ஒருவர் மற்றும் தாக்குதல்காரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதியின் சாலைகள் பாதுகாப்புப் படையினரால் முடக்கப்பட்டு ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியிலிருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவத்தில், இருதரப்பிலும் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், ஒரு பாதுகாப்பு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த பயங்கரவாத அமைப்பான போக்கோ ஹராம் நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு இதை முழுமையாக மறுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து