முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது வைணவர்கள் இடையே மோதல்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      ஆன்மிகம்
Kanchipuram 2024-05-26

Source: provided

காஞ்சிபுரம் : சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வைணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைணவர்களான வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெற்றது. இதற்காக சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபந்தம் பாடுவதில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. தென்கலை பிரிவினரே கோவிலில் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு முன்னுரிமை பெற்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென அங்கு வந்த வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் பாட அனுமதித்தனர். அதற்கு பின்னரும் பிரச்சினை செய்தவர்களை கோவிலில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து