முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      உலகம்
USA 2025-01-12

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரிய  பேரிடராக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டியில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத்தீ உருமாறியுள்ளது. அங்கு சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகளில் தீப்பற்றி எறிகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-இலிருந்து 16-ஆக் அதிகரித்துள்ளது. லாச் ஏஞ்சல்ஸில் ஈட்டன் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதிகளில் காட்டுத்தீக்கு 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை நிலவரப்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, அப்பகுதிகளிலிருந்து மேலும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுவதா? வேண்டாமா?? என்ன செய்வதென அறியாமல் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட மெல் கிப்சன், லெய்டன் மீஸ்டெர், ஆதம் ப்ராடி, பாரிஸ் ஹில்டன் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் சுமார் 150 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ எறியும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ச்செர், சன்செட், லிடியா, வுட்லி, ஒலிவாஸ் ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் தீயணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டுத்தீ விபத்து ஏற்பட இடியும் மின்னலுமே முதன்மைக் காரணமாக உள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் மின்னல் தாக்கியதால் காட்டுத் தீப்பற்றவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். காட்டுத்தீ பரவியதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னொருபுறம், கடந்த அக்டோபர் முதல் லாஸ் ஏஞ்சல்ஸில் 4 மி.மீ. மழைப்பொழிவு மட்டுமே பதிவாகியிருப்பதால் ஏற்பட்டுள்ள வறண்ட வானிலையும், கடற்புறத்திலிருந்து வீசி வரும் பலத்த சூறைக்காற்று (‘சாண்டா அனா விண்ட்ஸ்’), காட்டுத் தீப்பற்ற காரணமாக அமைந்திருக்ககூடுமென்றும் சொல்லப்படுகிறது. இப்பகுதிகளில் இன்னும் ஒருவாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கலக்கமடையச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து