எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் மனம் குளிர சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. மகளிர் அணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் , முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் \முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா,எஸ்.வளர்மதி டாக்டர் சரோஜா,ராஜ லட்சுமி ஆகியோரும் முன்னாள் எம்எல்ஏக்களும் நிர்வாகிகளுமான கணிதா சம்பத, ஏஎஸ்மகேஸ்லவரி , ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்,
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்துணைத்தலைவரும் ஜெயலலிதா பேரவை மாநிலசெயலாளருமான உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்,. .முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின் 77-ஆவது பிறந்த நாளான 24.ம்தேதி , அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், மகளிர் பயன்பெறும் வகையிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குதல், கண் தானம், இரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், இலவசத் திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உட்பட மகளிர் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பிப்பது என இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, பெண்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திச் சிறப்பிப்பது என அக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க. துணையாக இருந்து, டங்ஸ்டன் ஏல முறையை ரத்து செய்ய பாடுபட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


