எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 305 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இதன் காரணமாக ஆட்டம் சுமார் 35 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
_____________________________________________________________________________________
அதிக அரைசதம்: ஜோ ரூட் சாதனை
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது. இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
_____________________________________________________________________________________
ஹாட்ரிக் வெற்றி: அயர்லாந்து சாதனை
ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி முதலாவது மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடந்த 2018-இல் விளையாடியது. இதன் பிறகு 2023-ம் ஆண்டு வரை அயர்லாந்து அணி தொடர்ந்து விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து அந்த அணி தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது. அபு தாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளிலும், மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது. வெறும் பத்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றதே அதிவேக ஹாட் ட்ரிக் சாதனையாக இருந்து வந்தது.
_____________________________________________________________________________________
இந்திய அணி குறித்து ரணதுங்கா
‘தி டெலிகிராப்’ ஊடக நிறுவனத்துக்கு அர்ஜுனா ரணதுங்கா கூறியதாவது: 90-களின் ஆரம்பத்தில் நான் கேப்டனாக இருந்த போது பேட்டிங் ஆர்டரை ஒரு பேட்டராகப் பார்ப்போம். கவாஸ்கர், வெங்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத்.. என அவர்களை வீழ்த்தி விட முடியாது. அசாருதின், சச்சின் டெண்டுல்கர், காம்ப்ளி, திராவிட் அடுத்ததாக வந்தனர். இவர்கள் எல்லாம் எவ்வளவு தரமான வீரர்கள் என்பது உலகறியும். இந்திய அணியில் அந்த ‘தரம்’, ‘கிளாஸ்’ இப்போதைய அணியில் இருக்கிறதா? இல்லை என்றுதான் கூறுவேன். இப்போது ஆடும் இந்திய அணியை எனது 1996-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய மண்ணிலேயே மண்ணைக் கவ்வச் செய்யும். இப்போது ஆடும் வீரர்களை இருமுறை வீழ்த்தி விடுவோம். இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவேன்.
நாம் நம் இளம் தலைமுறை வீரர்களுக்கு முறையான கிரிக்கெட் ஆட்டத்தைப் பயிற்றுவிக்கிறோமா? இலங்கை வீரர்கள் இப்போது நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். தனியார் கிரிக்கெட்டில் ஆடுகிறார்கள், நாட்டுக்காக ஆட வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாட்டுக்காக ஆடும் மதிப்பு என்பது போயே போய்விடும். அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் கிரிக்கெட்டை மட்டுமேதான் ஆடுவார்கள். இவ்வாறு கூறினார் அர்ஜுனா ரணதுங்கா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
வார ராசிபலன்
01 Feb 2026


