முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

Source: provided

1) “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி” உருவாக்கப்படும்.

2) ரூ.1.35 கோடியில், திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.

3) ரூ.68 கோடியில் 7 மாவட்டங்களில் நீர்வடிப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்.

4) வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடியில் அமைக்கப்படும்.

5) விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

6) பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் செய்யப்படும்.

7) உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்து செல்லும் திட்டம்.

8) ரூ.8 கோடியில் தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள்.

9) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.39.20 லட்சம் ஒதுக்கீட்டில் ஒருங்கிணைக்கப்படும்.

10) 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள்.

11) 79 லட்சத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

12) வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.

13) 300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

14) திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும்.

15) 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல், 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள்.

16) பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற, மானிய வழங்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.

17) மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

18) வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை முகாம் நடத்தப்படும்.

19) 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி.

20) கல்லணை கால்வாய்ப் பாசானப் பகுதிகளில் வாய்க்கால்களில் ரூ.13.80 கோடியில் தூர்வாரும் பணிகள்.

21) ரூ.17.37 கோடியில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவது வலுப்படுத்ப்படும்.

22) சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் உருவாக்கப்படும்.

23) 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். 

24) வெண்ணைப்பழ சாகுபடியை 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

25) ரூ.5 கோடியில், புதிய பலா ரகங்களை பரவலாக்க,  பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கப்படும்.

26) பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.

27) தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

28) சீமைக்கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ள ரூ.11.74 கோடி ஒதுக்கீடு.

29) ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள சிறப்புத் திட்டம்.

30) ரூ.1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுடியை அதிகரிக்க மல்லிகைக்கான சிறப்புத் திட்டம்.

31) மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.8.51 கோடி ஒதுக்கீடு.

32) வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.

33) ரூ.2.4 கோடியில் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.

34) ரூ.1,168 கோடியில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, நுன்னீர்ப் பாசனம் திட்டம்.

35) இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திட இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்டும்.

36) உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

37) உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

38) உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்துக்கு விவசாயிகளுக்கு முழு மானியம்.

39) ரூ.52.44 கோடியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும்.

40) ரூ.108.6 கோடி ஒதுக்கீட்டில் எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும்.

41)  ரூ.40.27 கோடியில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்” தொடங்கப்படும்.

42) கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.

43) விதைகள், பிற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

44) 100 முன்னோடி விவசாயிகள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

45) இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.841 கோடியில் பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்படும்.

46) பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட “பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்” உருவாக்கப்படும்.

47) விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.

48) ரூ.42 கோடியில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

49) பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க “தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” உருவாக்கப்படும்.

50) டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும்.

51) மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.

52) மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து