எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி சார்பில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சிப் பூங்காவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையை சிங்காரச் சென்னையாக உருவாக்கிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கம் எம்.ஒ.பி. வைணவக் கல்லூரி அருகிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவை கல்லூரியை சுற்றியுள்ள பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கல்லூயின் மாணவிகள் பயன்படுத்திடும் வகையில், எம்.ஒ.பி. வைணவக் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 சதவீத முழுப் பங்களிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேம்படுத்தியுள்ளனர். இந்த பூங்காவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ள மரம் நடும் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மலர்மாலைக்கு பதிலாக ‘மரம் சான்றிதழ்’ வழங்குவதுடன், வருகை தந்த விருந்தினரின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, பராமரித்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வரை சிறப்பித்து கல்லூரியின் முதல்வர் “மரம் சான்றிதழை” வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, எம்.ஓ.பி. வைணவ கல்லூரி முதல்வர் முனைவர் அர்ச்சனா பிரசாத், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், மாமன்ற உறுப்பினர் நந்தினி உள்பட கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


