Idhayam Matrimony

2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. தி.மு.க. கூட்டணி கள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. பா.ம.க. கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. த.வெ.க கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தேர்தலில் நான் தனித்துதான் போட்டியிடுவேன். பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளூகிறீர்கள். நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து