முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி..? - போலீசார் தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

திருவள்ளூர் : திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் நேற்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, சிக்னல் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்த போது, தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் உள்ள ’எம்’பின் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த வழித்தடத்தில் அப்போது எவ்வித ரயில்களும் இயக்கப்படாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து, அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் வரும் விரைவு ரயில்கள், மின் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீஸார், மோப்ப நாய் ஜான்சி சகிதம், ரயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து, ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அகற்றப்பட்ட’எம்’பின் போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து