முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      உலகம்
Air

Source: provided

அன்காரா : பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை என்று துருக்கி நாடு தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கியதாக தகவல் வெளியானது.

கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு துருக்கி விமானப்படைக்கு சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானம் சென்றது அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்ப்பட்டதாகவும் கூறப்பட்டது.  விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ தளவாடங்கள் பற்றிய விபரங்களை வெளியாகவில்லை.

இந்த நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து