முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட்ரோ விமர்சனம்

திங்கட்கிழமை, 5 மே 2025      சினிமா
Retro

வெளிநாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அதே காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுபவர், அவரது ஆட்களையும் கொலை செய்கிறார். இதனால், அவரிடம் இருந்து பூஜா ஹெக்டே விலகிச்செல்ல, சூர்யா சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். இதற்கிடையே பூஜா ஹெக்ட்டா வை இவரது நண்பர்கள் தேடி வருகின்றனர் ஒரு கட்டத்தில் பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, என்பதை மாஸாகவும், சொல்வதே இந்த ‘ரெட்ரோ’ 

இரண்டு கதைகள், அதனுடன் வரும் மற்றொரு குட்டி கதையோடு படம் பயணித்தாலும், பார்வையாளர்கள் எந்தவித குழப்பமும் இன்றி படத்தை புரிந்துக் கொள்ளும்படி காட்சிகளை நேர்த்தியாக கோர்த்திருக்கிறார்  ரெட்ரோ காலக்கட்ட உலகை நம் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அக்காலத்து மாஸ் ஆக்‌ஷன் படத்தை தற்போதைய காலக்கட்ட மேக்கிங் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.  அம்மா செண்டிமெண்ட், கல்ட் சண்டைக்காட்சிகள், வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்கிறது. படம் முழுவதும் ரெட்ரோ ஸ்டைலில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் இந்த‘ரெட்ரோ’ மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து