முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 மே 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர்  டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும் மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக   பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய செபாஷ் ஷெரீப் கூறியதாவது:  "இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின. பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து விலக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் ஒற்றுமையாக நிற்கிறது" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து