எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). இவர், பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி மனுதாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக பள்ளி கொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினார். மேலும், பவித்ரா மாயமானது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பிடித்து விசாரணை நடத்தினார்.
2015-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி ஷமீல்அகமதுவை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், அங்குள்ள காவலர் குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைத்து விசாரித்தார். அப்போது, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல்அகமதுவை காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்கள் வசம் ஒப் படைத்து அனுப்பி வைத்தனர்.
திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஷமீல்அகமது ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனையிலும் அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷமீல்அகமது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஷமில்அகமதுவை தாக்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர், ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதில், காவல் துறையினரின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஷமில்அகமது மரணம் தொடர்மாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டனர்.
ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான காவல் துறையினரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
கற்கள் வீசப்பட்டதால் வாகனங்கள் சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறத்தொடங்கியது. இதையடுத்து,அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்ட காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
அப்போது, கலவரக்காரர்கள் காவலர்களை நோக்கி கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் எஸ்.பி., செந்தில்குமாரி மீது கற்கள் வீசப்பட்டதால் அவர் லேசாக காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆம்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதில்,15 பெண் காவலர்கள் உட்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆம்பூர் கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. குறைந்தளவே காவலர்கள் இருந்ததால் அவர்கள் பின் வாங்க வேண்டிய நிலை உருவானது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவலர்கள் திணறினர். ஆம்பூர் கலவரம் காரணமாக வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் தவித்தனர்.
இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது காவல் துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை யின் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆக.26-ம் தேதி (நேற்று முன்தினம்) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சியா மளாதேவி (திருப்பத்தூர்), மயில் வாகனன் (வேலூர்) ஆகியோர் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் குவிக்கப்பட்டனர். ஆம்பூர், வாணியம்பாடி பேருந்து நிலையங்களில் காவலர்கள் பெரும் அளவு குவிக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்திலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பத்தூர் நீதிமன்றத்துக்கு வழக்கின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ள தனித்தனி வாகனங்களில் வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனு மதிக்கப்பட்டனர். பகல் 12 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஆக.28-ம் தேதி (நாளை) வெளியாகும் எனக்கூறி நீதிபதி மீனாகுமாரி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதனால், ஆம்பூரில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்தது. வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும், ஆம்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-08-2025.
27 Aug 2025 -
ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? சூர்யகுமார் யாதவ்
27 Aug 2025டெல்லி : ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற தகவல் ரசிகர்கள் மத்தில் பரவியுள்ளது.
-
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
27 Aug 2025சென்னை : ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பது நிச்சயம் : பீகாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
27 Aug 2025முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
-
பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் பங்கேற்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
27 Aug 2025சென்னை : பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
உலக பாட்மிண்டன் சாம்பியன்: முதல் சுற்றில் சிந்து தகுதி
27 Aug 2025பாரிஸ் : உலக பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் முதல் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றார்.
-
நெல்லையில் செப்.7 வாக்கு திருட்டு விளக்க மாநாடு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
27 Aug 2025நெல்லை : திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
கோடநாடு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
27 Aug 2025ஊட்டி : கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்க பின்னலாடை நிறுவனங்கள் முடிவு
27 Aug 2025சென்னை : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
-
மக்கள் சக்திதான் பெரிது என்பதை பீகார் மாநில மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Aug 2025பாட்னா : மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ
-
தோல் புற்றுநோயால் ஆஸி. முன்னாள் கேப்டன் பாதிப்பு
27 Aug 2025சிட்னி : ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் புற்று நோயால் பாதிப்பு.
-
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
27 Aug 2025திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சின்னர் வெற்றி பெற்றார்.
-
இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Aug 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவ
-
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் சூழல்
27 Aug 2025மும்பை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலி : இந்தியா கடும் கண்டனம்
27 Aug 2025புதுடெல்லி : காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வர
-
தமிழகம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
27 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
ராஜஸ்தானில் தேர்வு மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை
27 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசு தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
-
தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டியில் தமிழக வீரர் அசத்தல்
27 Aug 2025டெல்லி : தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது.
-
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம் : அதிபர் ட்ரம்ப் பெருமிதம்
27 Aug 2025வாஷிங்டன் : வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்
27 Aug 2025மும்பை : புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம் செய்யப்பட்டார்.
-
விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
27 Aug 2025புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்
27 Aug 2025டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிலுவை: புதுச்சேரி தி.மு.க. கண்டனம்
27 Aug 2025புதுச்சேரி : அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளத்தை தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ள
-
இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதா