முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Bomb-Thread

Source: provided

சிதம்பரம்: கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து