முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் பயங்கரம்: 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      இந்தியா
Gujarat 2025-10-06

Source: provided

குஜராத் : குஜராத்தில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் திங்கள்கிழமை அதிகாலை மூன்று மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் கோஸ்வாமி கூறுகையில், கர்வாவாட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பலியானவர்களில் ஒருவர் இருசக்கரவாகனத்தில் அந்தப் பகுதியைக் கடந்து சென்றார். அவரும் இடிபாடுகளுக்குள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரில் ஒருவர் பெண் மற்றும் அவரது மகள் அடங்குவர்.

தகவல் அறிந்த பிறகு தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியைத் தொடங்கின. இது அதிகாலை 5 மணி வரை நீடித்தது. பலியானவர்கள் தினேஷ் ஜங்கி (34), தேவ்கிபென் சுயானி (65) மற்றும் அவரது மகள் ஜஷோதா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுயானியின் கணவரும் மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார். இந்த கட்டிடம் சுமார் 80 ஆண்டுகள் பழமையானது என்றும் நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து