முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துங்கள் : இஸ்ரேல் - ஹமாசுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

நியூயார்க் : காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் - ஹமாசுக்கு அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார். இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து