முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      தமிழகம்
Gold 2025-10-09

Source: provided

சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 425-க்கு விற்பனையானது. 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.

இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த 3 நாட்களுக்கு முன் சவரன் ரூ.89 ஆயிரத்து 480-க்கும், கிராம் ரூ.11 ஆயிரத்து 185-க்கும் விற்பனையானது.

புதிய உச்சமாக நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று முன்தினம் உயர்ந்து விற்பனையானது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 425-க்கு விற்பனையானது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடைசி 5 நாட்கள் விலை நிலவரம்:

09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400.

08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080.

07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600.

06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000.

05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து