முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்: முழு பட்டியல்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      தமிழகம்
CM-2 2024-11-02

Source: provided

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:

பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது. இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.

தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர். இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து