முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட சம்பவ உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல : சட்டசபையில் மா.சுப்பிரமணியன் விளக்கம்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
Ma Subramani

Source: provided

சென்னை : உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்று எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர். காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39 பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:- இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது. 28-ம் தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின. உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து