எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஞ்சலிக்குப் போட்டியா?? வந்தா மல ப்ரியங்கா பேட்டி!
அஞ்சலிக்குப் போட்டியா?? வந்தா மல ப்ரியங்கா பேட்டி!
அஞ்சலிக்குப் போட்டியா? வந்தா மல ப்ரியங்கா பேட்டி!
விக்ரம், விஜய் சேதுபதி போன்று தனது முந்தய படங்களின் சாயல் தெரியாமல் அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா.
வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார்.
பொதுவாக நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது, நிறைய யோசித்து பதில் சொல்வார்கள் அல்லது இது வேண்டாமே.. இது பர்சனல்.. என்று மழுப்புவார்கள்..
ஆனால் ப்ரியங்காவோ நாம எப்ப கேள்வியை முடிப்போம் பதிலை தருவோம் என வியக்கவைக்கிறார்..
அவரிடம் பேசியபோது..
நீங்க தமிழ் நல்லா பேசறீங்களே?!
ஆமாம் சார் .. பாண்டிச்சேரி தான் என் சொந்த ஊர்..
தமிழ் சினிமால கேரளாவை சேர்ந்தவர்களும் மும்பை பொண்ணுங்களும்தானே நடிக்கறாங்க .... நீங்க எப்படி?
அப்படி இல்லை சார்.. நல்லா தமிழ் பேசி நடிக்கிற பொண்ணுங்க வேணும்னு தான் நிறைய டைரக்டர் விரும்பறாங்க.. அப்படி கிடைக்லைன்னு தான் மற்ற மாநிலத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை அவங்களுக்கு.. ஆனால் இப்ப அப்படி இல்லை.. நிறைய தமிழ் பொண்ணுங்க சினிமாவுல நடிக்கிறாங்க..
அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா?
அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும் ..அதை நான் கண்டிப்பா பிடிப்பேன்..
வந்தா மல படத்தில அடிக்கடி முத்தத்தை பற்றியே பேசறீங்க.. நிஜ வாழ்கையில் யார் கிட்டயாச்சும் முத்தம் வாங்க ஆசை இருக்கா?
இருக்கு.. என் வருங்கால கணவரிடம்..
உங்க திருமணம் காதல் திருமணமா இருக்குமா?
கண்டிப்பா இல்ல.. அதை செய்யத்தான் எனக்கு என் பெற்றோர் இருக்காங்க.. அவங்களுக்கு எனக்கு, என்ன செய்தா நான் நல்லா இருப்பேன்னு தெரியும்.. எனவே எனக்கு திருமணம் நிச்சயம் அம்மா அப்பா பார்க்கிற பையன் தான்.
கதைக்கு தேவைன்னா..கிளாமரா நடிக்க சொன்னா நடிப்பீங்களா?
ஹாப் சாரி, சுடிதார்லையே என்ன பார்ததால இப்படி கேட்கறீங்கன்னு நினைக்கிறன்.. கண்டிப்பா மாடர்ன் பொண்ணா நடிப்பேன் சார் .. வந்த மல படத்துல சைபர் ஆகலாம்னு ஒரு பாட்டு வருது சார்.. அதை பார்த்தீங்கன்னா இப்படி கேட்க மாட்டீங்க..
தமிழ் பொண்ணுங்க கிளாமருக்கு மறுக்கிறதாலத்தான் இயக்குநர்கள் கேரளா மும்பை பக்கம் போறாங்க சரியா??
சரி நானே இப்போ நீச்சல் உடையில வந்தா நீங்க ரசிப்பீங்களா?? ஏம்மா நல்லா ஹோம்லியாத்தானே நடிச்சிட்டிருந்தே என்னாச்சும்மான்னு கேப்பீங்களா? மாட்டீங்களா?? எல்லா படங்களுமே நீச்சலுடையில ஹீரோயின் கேட்கிறதில்லை. ஹோம்லியா உள்ள படங்களுக்கு ஏன் மும்பைக்கும் கேரளாவுக்கும் போகணும்? தமிழ்ப்பொண்ணுங்களை நடிக்க வைக்கலாமே? அப்போ நிறைய தமிழ்ப்பெண்கள் நடிக்க முன் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு நான் முன்னுதாரணமா இருக்க விரும்புறேன்.
வந்தா மலயில் ஆபாசமா வசனங்கள் பேசி நடிச்சிருக்கீங்களே?
சேரியில வாழுற சென்னை பொண்ணுங்க நான்.. இந்த படத்துல எனக்கு ரொம்ப போல்டான கேரக்டர்.. அங்க உள்ள பெண்கள் ஆண்களுக்கு சமம். அவங்களே ஆம்பள மாதிரி எல்லா வேலையும் செய்வாங்க. காதலைக்கூட மென்மையா சொல்லத் தெரியாது. ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா? அப்படித்தான் வசந்தாவும். அவளுக்கு எதையும் ஒளிச்சிப் பேசத் தெரியாது. அதனால அந்த வசந்தா பேசுனது ரொம்பக் கம்மிதான். ..
இந்த படத்துல சென்னை தமிழ் பேசி நடிச்சிருக்கீங்களே .. எவ்ளோ நாள் பயிற்சி எடுத்தீங்க..?
அதெல்லாம் இல்ல சார்.. இப்படித்தான் பேசணும்னு இகோர் சார் சொன்னதை செய்தேன்.. அவ்வளவுதான்..
நடிக்கும் படங்கள் பற்றி...
ரீங்காரம், திருப்பதி லட்டு, சாரல் னு மூணு படம் பண்றேன் சார்.. திருப்பதி லட்டு படத்துல சுரேஷ் காமாட்சி சார் இயக்கத்துல விஜய் வசந்த் சார் கூட ஜோடியா பண்றேன்.. முழுக்க முழுக்க காமடிப் படம்...என்றார்.
தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வாழ்த்துகள் ப்ரியங்கா...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



