எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாயா
மாயா
உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள மாயா திரைப்படம்
போடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு அவர்கள் தயாரித்து அஷ்வின் நாராயணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. சூப்பர் நச்சுரல் படமான இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். படத்துக்கு இசை:-ரோன் ஏதன் யோகன் ;கேமரா :- சத்யன் சூர்யன், படத்தொகுப்பு:- சுரேஷ், ஆர்ட்:- தா.ராமலிங்கம் ; காஸ்ட்யும் டிசைன்:- வாசுகி பாஸ்கர்.
படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் நாராயணன் பேசும் போது கூறியவை ; நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை அதற்க்கு காரணம் என்னவென்றால் யாரையாவது நினைத்து நான் கதை எழுதி அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாது. படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த சிங்கள் மதர் கதாபாத்திரத்தில் நன்கு தெரிந்த முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார். உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாரா அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, உடனே தயாரிப்பாளர் நயன்தாரா அவர்களிடம் பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார்.
நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். இந்த படத்தை படமாக்க மொத்த குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை செய்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அதை பொறுத்து கொண்டு ஒரு வருடம் அவர்கள் முழு சுதந்திரத்தோடு கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி உள்ளனர்.
முக்கியமாக படத்தின் கேமரா மேன் சத்யா படத்தை லோ லைட்டில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிக தத்ருபமாக படம்பிடித்துள்ளார். படத்தில் ஆரி அவர்கள் ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான பத்ரிக்கைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும். இந்த படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லல் இருக்கும். இந்த படத்தின் சவுண்ட் டிசைன் பெரிய அளவில் பேசப்படும். நயன்தாராவுக்கு இந்த படத்துக்கு ஏற்றவாறு மேகப் போடப்பட்டுள்ளது. படத்தை பற்றி நடிகர் ஆரி பேசும் போது ; இந்த படத்தில் முதலில் நடிகர் நாணி அவர்கள் நடிப்பதாக தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன் அதற்க்கு காரணம் படத்தின் கதை. சில படங்களில் தான் படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும் , அந்த சில படங்களை போல் இந்த படத்திலும் எல்லோருக்கும் முக்கியம்துவம் இருக்கும். படத்தை வெளியிடும் ஸ்ரீ தேன் ஆண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி சார் நான் வெளியிட்ட பேய் படங்களிலேயே சிறந்த படம் இது தான் என்று கூறியுள்ளார். முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர் உலக அளவில் ஆங்கிகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். மாயா திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


